main

திருமந்திரம்

பத்தினியும் பக்தனும் மனம் புண்பட்டால்…..

February 16, 2013 — by Rie

Shiva_Linga.gif

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.  –  (திருமந்திரம் – 532)

விளக்கம்:
கற்புடைய பெண்கள், சிவபக்தர்கள், தத்துவ ஞானம் கொண்டவர்கள் ஆகியோரின் மனம் கலங்கும்படிச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்குள் தங்கள் செல்வத்தையும் உயிரையும் இழப்பார்கள்.  இது நந்தி தேவனின் ஆணை.

Those who hurt the heart of
chaste women, devotees of Siva and Guru of wisdom,
will lose their wealth and their lifetime will
end in one year time. This is Lord Nandi's order.

திருமந்திரம்

அவன் இவன் ஆவான்

February 14, 2013 — by Rie

Shiva_Linga.gif

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே.  –  (திருமந்திரம் – 766)

விளக்கம்:
அண்ணலாகிய சிவபெருமான் நம் சீவனுடன் கலந்திருக்கும் தன்மையை நாம் அறிந்திருக்கவில்லை. சிவபெருமானை தன்னுள்ளே கண்டு கொண்டவர்களிடம் அந்த சிவன் நீங்காதிருந்து அருள்புரிவான். அப்படி சிவனருள் பெற்றவர் சிவமே ஆவார்.

We don't know the Lord who reside within us.
For those who realize the Lord within him,
the Lord Siva will not leave him.
And for those, he and the Lord become one.