பிராணாயாமத்தினால் உடல் சிவக்கும், முடி கறுக்கும்

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.   – (திருமந்திரம் – 575)

விளக்கம்:
தன் விருப்பப்படி அலைந்து திரிகின்ற மூச்சுக்காற்றை நெறிப்படுத்துதலே பிராணாயாமம் ஆகும். அவ்வாறு செய்யும் போது பிராணவாயு தூய்மைப்படும், உடலில் இரத்தம் நன்கு பாய்ந்து சிவந்த நிறம் கொடுக்கும், தலைமுடி கறுக்கும். நம் உள்ளத்தில் வசிக்கும் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான்.

பிராணாயாமம் செய்து மூச்சை நெறிப்படுத்தினால், இரத்த ஓட்டம் மேம்படும்.

நின்மலம் – மாசற்ற,   புரிசடையோன் – சிவபெருமான்

One thought on “பிராணாயாமத்தினால் உடல் சிவக்கும், முடி கறுக்கும்

  1. பிரணாயாமம் பற்றிய பதிவுக்கு நன்றி, பிரணாயாமம் உகந்த திசை எது என தெரியபடுத்தினால் நன்று, சுரேந்திரன், குண்டூர்.

Comments are closed.