ஒழுக்கம் இல்லாதவர்க்குத் தானம் செய்ய வேண்டாம்

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.  –  (திருமந்திரம் – 505)

விளக்கம்:
ஒழுக்கமும் தவமும் இல்லாத வேடதாரிகளுக்குத் தானம் செய்வது, வறட்டுப் பசுவை வணங்கி  அதற்கு உணவளித்து அதன் பாலைக் கறந்து குடிப்பதைப் போல பயன் இல்லாத செயலாகும். காலம் கடந்து பயிர் செய்வது போன்ற அவ்விதத் தானத்தைத் தவிர்க்க வேண்டும்.

தகுதி இல்லாத வேடதாரிகளுக்கு தானம் செய்வது எந்தவிதப் பயனையும் தராது.

One thought on “ஒழுக்கம் இல்லாதவர்க்குத் தானம் செய்ய வேண்டாம்

Comments are closed.