மாயகம்!

மெல்ல மெல்ல அசை போடும்
என் துடுப்பு அது
உன் குளத்தினில்…
நுரை நுரையாய் பூத்திற்று.

விகடன் புத்தகத்துக்குள் இருந்த அந்த துண்டு சீட்டை பார்த்ததும் எதோ கவிதை மாதிரி இருக்கேன்னு படிச்சுப் பார்த்தாள் தேவகி. அதன் நோக்கம் கொஞ்சம் புரியுறப்ப ச்சீன்னு ஆகிப்போச்சு அவளுக்கு. புருஷன் செத்துட்டா ஆளாளுக்கு இப்படி ஜாடை பேச கிளம்பிருவாங்களோ. ஆறு மாசத்துக்கு முன்னதான் செத்து போனான் அவன். மரியாதை எதுக்கு அவனுக்கு? நாற்பதியெட்டு வயசுல முப்பத்தியெட்டுன்னு சொல்லி கல்யாணம் பண்ணினவன்தானே! தேவகிக்கு அப்போ இருவத்தி ஒண்ணு. ஆனாலும் கல்யாண வாழ்க்கை அப்படி ஒண்ணும் மோசமில்லை. வயசானாலும் ஆள் நல்ல திடகாத்திரம். வசதிக்கு பஞ்சமில்ல. சுகத்திலும் ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படி லாரியில் அடிபட்டு சாகாமல் இருந்தால் இப்பவும் அவளூக்கு அது ஒரு நல்ல வாழ்க்கைதான்.

தேவகிக்கு இப்போ பிறந்த வீட்டிலும் பேச்சு வார்த்தை இல்லை. ஐம்பதினாயிரத்துக்கு ஆசைப்பட்டு இப்படி வயசானவருக்கு கட்டி வச்சிட்டாங்களேன்னு பெத்தவங்களோட பேசுறத நிறுத்திட்டா. அவங்களும் ஒண்ணும் வேணும்னு அப்படி செய்யலை. வீட்டில் இருந்த கடன் பிரச்சனை அப்படி.

பழசெல்லாம் நெனச்சு அழுதுகிட்டே தூங்கினவளுக்கு, எழுந்த  போது  கொஞ்சம் தெளிவாய் இருந்தது. துண்டுச் சீட்டு எழுதின அந்த இருபது வயசு பையனை நெனச்சா சிரிப்புதான் வந்தது. கண்ணாடி முன்னால் நின்னு தன்னை தானே பார்த்துகிட்டு இருந்தாள். சாதாரணமாய் நின்னதே நெஞ்சை நிமிர்த்தி நின்னாற் போல இருந்தது. ‘இதெல்லாம் பார்த்தா துடுப்பு தாங்குமாடா’ன்னு கோணலாய் ஒரு எண்ணம் மனசில வந்து போச்சு. அந்த துண்டு தாளை எடுத்து கிழிச்சு போட்டுட்டு விகடனை எடுத்து புரட்ட ஆரம்பிச்சா. புரட்டிகிட்டே வந்தவள் சுந்தரம்கிற பேரை பார்த்தவுடனே இது நம்ம சுந்தரமான்னு பார்த்தாள். அவன் எழுதின கதைதான் வந்திருந்தது. சுந்தரம் சின்ன வயசிலேருந்து நண்பன். கூடப் படிச்சவன். எதோ கொஞ்சம் சுமாரா எழுதுவான். அப்பப்போ சில பத்திரிக்கையில வரும். ‘என்ன கதை விடுறான்னு பார்போம்ன்னு’ எடுத்து படிக்க ஆரம்பிச்சாள்.

இப்போதெல்லாம் மீனாட்சி தும்மினாலே ராஜாராமுக்கு சந்தேகம் வருது. யாருக்கும் கேக்கணும்னு தும்முராளோன்னு வெளியெல்லம் போய் நோட்டம் பார்க்கிறார். இதெல்லாம் பார்க்கும் மீனாட்சிக்கு ரொம்பவே எரிச்சலாய் இருந்தது, கொஞ்சம் வினோதமாவும் இருந்தது. ‘இது வரை இவர் அப்படியெல்லாம் இல்லையே. அதுவும் நமக்கு நாற்பது வயசானதுக்கு அப்பறமா இப்படி சந்தேகமெல்லாம் வரணும்ன்னு’ வருத்தமாய் இருந்தது. ராஜாராமுக்கு அவள் இன்னும் புது பொண்டாட்டி மாதிரி இன்னும் இழையனும், கொஞ்சணும்னு ஆசை. அதுவும் அவங்களுக்கு பிள்ளை இல்லாத்தால் இவளுக்கு என்ன இடைஞ்சல்ன்னு யோசனை. அதான் தேவை இல்லாத சந்தேகம் எல்லாம் வர ஆரம்பிச்சது.இந்த சமயத்தில்தான் ராஜாராம் தினமும் வேலாயுதத்தை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு கல்யாண புரோக்கர், தினமும் வாக்கிங் போகும் போது பழக்கமாச்சு. விளையாட்டாய் ஒரு நாள் “யோவ் உம்ம பார்த்தால் வயசான மாதிரியே தெரியலை. பேசாம உமக்கு ஒரு பொண்ணு பார்த்திருவோமா?’ன்னு’ கொளுத்தி போட ராஜாராம் மனசில அது பத்திகிடுச்சு. தட்டு தடுமாறி அது பத்தி வேலாயுதத்திடம் கேக்க பத்து நாளாச்சு அவருக்கு. புரோக்கர் தொழிலில் இது போல் நிறைய பார்த்திருப்பதால் வேலாயுதம் ராஜாராமுக்கு குற்றவுணர்வு எதுவும் எழாதபடி பேசினார். “பக்கத்து ஊருல ஒரு பொண்ணு இருக்கு. இந்த போட்டோவை பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லும்”ன்னார். பெண்ணை பார்த்ததும் ராஜாராம் அசந்தே போனார். “ஆனா ஒண்ணு. அந்த குடும்பம் ரொம்ப கஷ்டத்தில் இருக்கு. கடன் பிரச்சனை.” வேலாயுதத்தை மேற்கொண்டு பேச விடவில்லை “அடப்போய்யா என்ன பெரிய வசதி. அதெல்லாம் நான் பார்த்துகிடுறேன்.” எங்கே இந்த பொண்ணு கிடைக்காமல் போகுமோன்னு அவசரப்பட்டார் ராஜாராம்.

அடுத்த வாரத்தில் பெண்ணைப் பார்க்க போனார்கள். நேரில் பார்க்க பெண் ரொம்பவே அம்சமாய் இருந்தாள். ஒரு வார்த்தை சொல்லாமல் இருபத்தையாயிரம் ரூபாயை எடுத்து பெண்ணின் தந்தை கையில் கொடுத்து விட்டார். கல்யாணம் முடியவும் இன்னும் தர்றேன்னார். பணத்தை பார்த்ததும் அந்த வீட்டில் யாரும் ஒன்றும் சொல்ல முடியலை. அடுத்த வாரத்தில் கல்யாணம் என்று முடிவாயிற்று. அந்த ஊரிலேயே கோவிலில் வைத்து என்று பேசியாயிற்று.

முதலில் இன்னும் ஒரு வாரமான்னு யோசிச்சவருக்கு நாள் வேகமாக நகர ஆரம்பிச்சது. இன்னும் ஒரு மாசம் தள்ளி வச்சிருக்கலாமோன்னு தோணிச்சு. மீனாட்சியை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் இருடி உன்னை பழிவாங்குறேன் போலியாய் வீரம் காட்டினார். நாலாவது நாள் காய்ச்சலே வந்து படுத்து விட்டார். காய்ச்சலாய் இருந்தவரை மீனாட்சி எழவே விடவில்லை. இது வரை இப்படி முடியாமல் படுத்தது இல்லை. சாப்பாடு எல்லாம் படுக்கைக்கே வந்தது. ஊட்டி விடாத குறைதான். ராஜாராமுக்கு மீனாட்சி பக்கத்தில் வரும் போதெல்லாம் என்னவோ போலிருந்தது. “பேசாம இருங்க. என்னமோ புதுமாப்பிள்ளை மாதிரி ரொம்ப பிகு பண்ணிக்கிட்டு” அதிகமாகவே மேலே ஒட்டினாள். ராஜாராமுக்கு நினைவெல்லாம் அந்த புது பெண்ணை எப்போ தொட்டு பார்ப்போம்ன்னு இருந்திச்சு.

ஏழாவது நாள் காலை நாலு மணிக்கே எழுந்து குளிச்சி ரெடியாகிட்டார். தூங்கிட்டு இருந்த மீனாட்சியை எழுப்ப மனசு வரலை. வேலாயுதம் வர இன்னும் நேரம் இருந்தது. ஏதோ நினைப்பு வந்தவராய் மீனாட்சியை திரும்ப பார்த்தார். அவள் ஒரு பழைய புடவை கட்டியிருந்தாள். அது அவருக்கு ரொம்ப பழக்கமானதாக இருந்தது. அந்த அரையிருட்டில் உற்றுப்பார்த்தவருக்கு ஞாபகம் வந்தது. மீனாட்சியுடன் கல்யாணாம் ஆகி வாங்கிக் கொடுத்த முதல் சேலை அது. வாங்கின அன்னைக்கு அவளுக்கு இருந்த சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பார்க்கணுமே! அன்று நடந்தது பூராவும் ஞாபகம் வந்தது. “இன்னைக்கு எல்லாமே நான்தான். நீங்க பேசாம சும்மா இருக்கணும்” இப்போ வந்து காதுக்குள் கடிக்கிற மாதிரி இருக்குது. அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்திட்டார்.

வேலாயுதம் வந்து கூப்பிட்ட போது சுரத்தே இல்லாமல் கிளம்பினார். வழியில் வேலாயுதம் பேசிக்கிட்டு வந்தது எதுவுமே அவர் காதில் விழவில்லை. ஸ்டாப்பில் பஸ் வந்து நின்னப்போ வேலாயுதம்தான் முதல்ல ஏறினார். பின்னாலே ஏறப்போன ராஜாராம் திடீர்ன்னு திரும்ப கீழே இறங்கிட்டார். வேலாயுதத்துக்கு ஒன்னும் புரியலை. “என்னைய்யா ஆச்சு உமக்குன்னு” கோபப்பட்டார். இல்லேன்னு இழுத்த ராஜாராம் “சின்னப் பொண்ணா இருக்கு. அது வாழ்க்கையை பாழாக்க வேண்டாம்னு பாக்கிறேன். கொடுத்த பணம் கூட அவங்களுக்கே உதவியா இருக்கட்டும். இன்னும் வேணும்னாலும் தர்றேன்”. பதிலுக்கு என்ன வேணும்னாலும் திட்டிக்கொள் என்கிற பாவனையில் தலை குனிந்து நின்றார்.

படித்து முடித்த தேவகிக்கு தொண்டை அடைச்சுகிடுச்சு. ஒரு வெள்ளைத்தாளைத் தேடி எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

அன்புள்ள சுந்தரத்துக்கு,

உன்னுடய சிறுகதையை விகடனில் படித்தேன். மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் கடைசியில் ஏன் முடிவை மாற்றி எழுதி இருக்கிறாய் என்று புரியவில்லை. நீ எழுதியபடி அவர் மனம் மாறியிருந்தால் இன்னைக்கு எனக்கு துடுப்பு, அடுப்புன்னு எவனும் எழுதியிருக்க மாட்டான். உன் ஆசையை கதையின் முடிவாய் மாற்றி இருக்கிறாய் போலும். ஆனால் கதையின் கீழ் வந்துள்ள விளம்பரம் உன் கதையின் மூலத்தை காட்டி கொடுக்கிறது. இது தற்செயலாய் தான் நடந்திருக்க வேண்டும். ஆனாலும் ஆச்சர்யமாய் உள்ளது.

அன்புடன்
தேவகி.
படித்து பார்த்த சுந்தரம் விகடனை எடுத்து புரட்டிப் பார்த்தான். வழுக்கைத் தலைக்கு சிகிச்சை விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தில் தேவகியின் புருஷன் ஃபோட்டோ, சிகிச்சைக்கு முன், பின் என வந்திருந்தது. ஆள் செத்துப் போனாலும் இன்னும் அந்த விளம்பரத்தில் அவர் படம்தான் வந்துகிட்டுருக்கு.
(அமரர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் இந்த சிறியவனை மன்னிக்க வேண்டும்)

அந்திம காலம்

கலி முற்றி விட்டதாம்.
இயற்கையை மீறி விட்டோமாம்.
ஏதோ கல்கி அவதாரமாம்.
கர்த்தர் வேறு வருகிறாராம்.

என்னை பொறுத்த வரை
என் சாவில் இந்த உலகம்
அழிந்து விடும்!


குழந்தையும் தெய்வமும்!


 ‘டேய் ரவி இங்௧ கொஞ்சம் வாயேன்!’ ரவி சுத்தி சுத்தி பார்த்தான், பஸ் ஸ்டாப்ல அந்த சின்னப் பொண்ண தவிர வேற யாரும் இல்ல. எட்டு வயசு இருக்கும்.

‘௭ன்னையவா ௯ப்பிட்டெ?’

‘உன்னைத்தாண்டா’.  அடிக்கவே போயிட்டான்.

‘சாரிப்பா ப்ளீஸ்! காலைலேயி௫ந்து ஒரே கன்ஃப்யுஷன். யார எப்படி ௬ப்பிடுறதுன்னே தெரியலை’

‘இத்தனூண்டு   இ௫ந்துகிட்டு டா போட்டா ௬ப்பிடுறே! ஆமா உங்க அப்பா அம்மா எங்க?’

 ‘அதுங்௧ளைப்பத்தி பேசாதே. நெனச்சாலே கோபம் கோபமா வ௫து. இவங்க யா௫ன்னே தெரியலே. காலேல௫ந்து என்னோட அப்பா அம்மான்னு சொல்லிகிட்டி௫க்காங்க. எனக்கு அதுங்௧ளை பிடிக்கவே இல்லை.’

 ‘உன்ன எங்க இ௫ந்தும் கடத்திட்டு வந்திட்டாங்களா?’

‘அதுக்கெலலாம் கொஞ்சமாவது தில் வேணும். இவங்கள யாராவது கடத்தாம இ௫ந்தா சரி.’

 ‘சரி என்ன கிளாஸ்  படிக்கிற?’

‘என் கஷ்டகாலம் இன்னிக்கு ஃபோர்த்து ஸ்டாண்டர்ட் போனேன்.’

‘அதுல என்ன கஷ்டம்?’

‘எத்தனை தடவை அத படிக்கிறது?’

‘ஏன் ஃபெயில் ஆயிட்டியா?’

‘நீ வேற! ஸாரி. நான் பி.எஸ்.சி ஸ்டூடண்ட் அல்ஜிப்ரா நல்லா போடுவேன். இன்னிக்கு உட்கார்ந்து மல்டிப்ளிகேஷன் டேபிள் எழுதினேன்! இங்கிலீஷ் டீச்சர்க்கு கிராமர் தெரியலை. தப்பு தப்பா சொல்லிக் கொடுக்கிறாங்க.’

 ரவிக்கு சீக்கிரம் பஸ் வந்தா நல்லதுன்னு தோணுச்சு.
‘ஏம்மா இப்படி கொழப்புற?’
‘சரி இந்த ஈக்ஃயுவேஷனுக்கு ஷொலிஸன் எழுது பார்ப்போம்.’ ஒரு பேப்பர  எடுத்து நீட்டினாள்.
பார்த்தாலே   தல சுத்துச்சு. ‘இதெல்லாம்  உனக்கு எப்படி தெரியும்?”

அதான் சொல்றனே நான் பி.எஸ்.சி .ஸ்டூடண்ட்.’

 கிழிஞ்சது . ‘உனக்கு என்னதான்  ப்ராப்ளம்?’

‘நேத்து நைட்டு துங்கப் போற வரைக்கும் எல்லாம் சரியாத்தான் இ௫ந்தது. காலைல எந்திரிக்கும் போது பார்த்தா நான் யார் வீட்டுல படுத்தி௫க்கேன்னே தெரியலே. கண்ணாடியை பார்த்தா யாரையோ பார்த்த மாதிரி இ௫க்கு. சின்னப்பொன்னா வேற தெரியுறேன். இப்ப என்ன பண்றதுன்னே தெரியலே.’

 ‘என் பே௫ உனக்கு எப்படி தெரியும்?’

‘எங்க தெ௫வுலதானே நீ இ௫க்கே. எனக்கு ஒ௫ ஹெல்ப் பண்ணேன். எனக்கு இங்க இ௫க்கவே பிடிக்கலை. என்ன உன்௬ட ௬ட்டிட்டு போயிரேன் ப்ளீஸ்.’

சரி இதுக்கு மேல இங்க நின்னா கத கந்தல்தான். ‘சரி கொஞ்சம் வெயிட் பண்ணு. இப்போ வந்திர்றேன்’ ன்னுட்டு பய எஸ்கேப் ஆயிட்டான்.

அவன் போகவும் அவ முகத்தில ரொம்பவே சந்தோசம் தெரிஞ்சது. பத்து நிமிஷம் கழிச்சு அவளோட அப்பா வந்தார் பைக்குல கூட்டிபோக.  ‘ஸாரிடா ரொம்ப வெயிட் பண்ண வச்சிட்டேன்’. கொழந்த தனிய நிக்குதேன்கிற  பதட்டம் தெரிஞ்சது .

‘அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. எனக்கு நல்லாவே நேரம் போச்சு.’

எல்லை தொடத்தான்!

இல்லை ஒரு எல்லை அவ் வின்பம்
எல்லை தாண்டும் போது கிடைப்பது
எல்லை தொடுதல்  சுகம்
எல்லை தாண்டுதல் சாகசம்
எல்லை கடக்க நினைத்தல்  போதை
எல்லை கடந்தபின் விரியும் உன் எல்லை மேலும்
அதுவும் நான் தொடத் தானே!


வலி!

வலியினால் ஆன பயன் பலம் பெறுதல்
வலி தாங்கினால் சிந்தை ஒருமைப் படலாம் 
வலி தாங்குதல் ஒரு யோகப் பயிற்சி
வலி வாங்கினால் அதுவே ஒரு சுகம்
கூடலில் கூட அப்படித் தானே!