அட்டாங்கயோகம் நூலுக்கான முன்னுரை

உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார்.  வானுலகத் தேவர்கள்  பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.

அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.

இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.

யோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

நிர்வாகத்தில் உதவும் பழமொழிகள்

முத்தையா ஒரு செங்கல் வியாபாரம் ஆரம்பித்தான். முதலில் நூறு கல் வித்தாலே பெரிய வியாபாரமா இருந்தது. வேலைக்கு ஆள் வச்சுக்கலை. தனக்கே சம்பள அளவில் ஏதாவது கிடைச்சா போதும்னு நடத்தினான். கொஞ்ச கொஞ்சமா வியாபாரம் கூடிச்சு. செங்கலை லோடாக கேட்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் வருமானம் ஏறுச்சு. வேலைக்கு ஒரு ஆள் வச்சா இன்னும் கொஞ்சம் வியாபாரம் கூட்டலாம்னு நெலமை வந்தது. வர்ற வருமானத்தில சின்ன பங்கு சம்பளமா குடுத்தா என்னன்னு தைரியமா வேலைக்கு ஆள் வச்சான். ஒரு ஆள் பத்து ஆள் ஆச்சு. ஒரு லாரி வாங்கி அதுவும் ஏழெட்டு ஆயிருச்சு. பர பரன்னு எல்லாருமா வேலை பார்த்து பெரிய வியாபாரமா வளர்த்துட்டாங்க.

முத்தையாவுக்கு இப்போ தன்கிட்ட வேலை பார்க்கிற பத்து பதினஞ்சி பேரை சரியா வேலை வாங்கினாலே போதும். வியாபாரம் தன்னால நடக்கும். அவன் ரொம்ப படிச்சிருக்கலைன்னாலும் தன்னோட அனுபவத்தினால யார்கிட்ட என்ன வேலை குடுக்கலாம், எப்படி அவங்களை சோர்வடையாம வேலை வாங்கலாம்னு தெரிஞ்சிகிட்டான். ஒருத்தன வச்சு இன்னொருத்தன கண்காணிக்கிறது எப்படிங்கிறது கூட கத்துகிட்டான்.

Mary Parker Follett என்னும் அமெரிக்க மேலாண்மை ஆலோசகர் (அவர் வாழ்ந்து முடிந்து 80 வருஷம் ஆகுது) ”management is the art of getting things done through people” என்கிறார். இவர் எழுதிய மேலாண்மையப் பற்றிய தத்துவங்கள் முக்கியமானவையாக பேசப்படுகிறது. முத்தையாவுக்கு இதெல்லாம் தெரியாது, ஆனால் இதத்தான் அவன் செஞ்சிகிட்டு இருக்கான்.

மேலாண்மையை ஆறு செயல்பாடுகளாக பிரிக்கிறார்கள்.

  1. Planning
  2. Organizing
  3. Staffing
  4. Leading
  5. Monitoring
  6. Motivation

Planning – திட்டமிடுதல். எவ்வளவு செங்கல் வித்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு செங்கல் இங்கே விற்க முடியும், நாம் எவ்வளவு கொள்முதல் செய்து இருப்பு வைக்கலாம் என்பதெல்லாம் யோசித்து முடிவு செய்வது. பழமொழி நானூற்றில் உள்ள ஒரு பாடல் இது.

தற்றூக்கித் தன்துணையுந்தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்.

இதில் உள்ள பழமொழி – ’யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகிவிடும்’.

இது நம்மால் செய்ய முடியுமா, இதை செய்து முடிக்கும் அளவு நமக்கு துணை உள்ளதா (ஆள் துணை மட்டுமில்லாமல் storage, transportation போன்றவையும் சேர்த்து), இதை முடிப்பதால் நமக்கு போதுமான பயன் உண்டா (வருமானம்) என்பதெல்லாம் யோசித்து அப்புறம் காரியத்தில் இறங்குபவர் வல்லவர்.

Organizing ஒருங்கிணைத்தல். அதாவது செயல்முறை வகுப்பது. செங்கலின் இருப்பை பராமரிக்க ஒருவர், வரவு செலவு எழுதி வைக்க ஒருவர், வசூல் செய்ய ஒருவர், இப்படி வேலைகளை பிரித்து கொடுத்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்துவது.

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்தற
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள்
இல்லதற்கு இல்லை பெயர்.

இதில்  ‘வடிந்தற வல்லதற்கில்லை வருத்தம்’ என்று பழமொழி ஆசிரியர் சொல்வது organizing என்பதற்கு பொருத்தமாக உள்ளது. அதாவது எந்த ஒரு வேலையையும், அது எவ்வளவு கடினமானதா இருந்தாலும், தெளிவா ப்ளான் பண்ணி பிரிச்சிகிட்டோம்னா அது நல்லபடியா முடியும்..

Staffing சரியான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது. அவர்கள் தகுதி தெரிந்து சரியான வேலை கொடுப்பது. பழமொழி  நானூறில் இதற்கு நிறைய பாடங்கள் உள்ளது.

தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா
முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்
கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்
மற்றதன் பாற்றேம்பல் நன்று.

தெளிந்த அறிவுடையவர் திறன் இல்லாதவனை வேலையில் அமர்த்த மாட்டார். கற்று அறிந்தவரையும் குற்றம் இல்லாதவரையும் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். யார் யாரை வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு நிறைய பழமொழிகள் உள்ளன.

Leading வழி நடத்துதல். இது ஒரு மேனேஜரின் வேலை. எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்கும் திறன். உதாரணத்திற்கு வேலை செய்பவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அவர்களை வழிக்கு கொண்டு வர தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்க்கு சப்ளை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரின் தண்ணீர் தெளித்து.

சிலரிடம் தன்மையாக நடந்து கொண்டால் தான் வேலை வாங்க முடியும். வேறு சிலரிடம் கடுமை காட்டினால் தான் வேலை நடக்கும். குளிக்கும் போது தேவைக்கேற்ப தண்ணீரில் வெந்நீர் கலப்பது போல அவரவர் தன்மைக்கேற்ப வேலை வாங்க வேண்டும். ஒரு மேனேஜருக்கு உபயோகமான பாடம் இது.

Monitoring – கண்காணித்தல். அவரவர் வேலையை பிரித்து ஒப்படைத்து விட்டாலும், அவர்கள் நல்லவர் ஆனாலும் வல்லவர் ஆனாலும் அவர்களிடம் வேலையின் நடப்பு நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வர வேண்டும். இதற்கு ரொம்பவே பொருத்தமான பாடல் ஒன்று உண்டு.

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்
தட்டாமல் செல்லா துளி.

தொட்டாலே துவளும் துளிரின் மேல் உளியை வைத்தாலும், அந்த உளியை தட்டினால் ஒழிய அது தளிரை வெட்டாது. அது போல பிறரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் தொடர்ந்து அவரிடம் அது என்னாயிற்று என்று விசாரித்து வர வேண்டும்.

Motivation ஊக்கப்படுத்துதல். வேலை பார்ப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கொஞ்சம் ஊக்கம் சேர்த்து கொடுத்தால் அங்கே வேலை நன்றாக நடக்கும். எல்லாருமே ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் தான். இங்கே ஒரு ஊக்கம் தரும் பாடல்.

வீங்குதோட் செம்பியன்சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்கதாம் கூரம்
படியிழுப்பின் இல்லை யரண்.

கூர்மையான அம்பை வில்லில் பொருத்தி அதன் அடியை இழுத்தால் எதிரே இருக்கும் எந்த தடையும் பொடி பொடியாகி விடும். நம்முடைய முயற்சி அந்த வகையில் இருந்தால் எவ்வளவு கடினமான காரியத்தையும் சாதிக்கலாம்.

மேலே சொன்ன செய்யுள்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதால் புரிவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் அதன் பொருள் உணர்ந்து பார்க்கும் போது இப்போதுள்ள மேலாண்மைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது. பழமொழி நானூறு மொத்தம் நானூறு பாடல்கள் கொண்டது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் வருகிறது. இதன் ஆசிரியர் முன்றுறையரையனார். இதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என கருதப்படுகிறது. தற்சிறப்பு பாயிரத்தில் ‘பண்டைப் பழமொழி நானூறும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்தப் பழமொழிகள் பழமையானது என்றால் அவை வழக்கத்தில் தோன்றிய காலத்தை யோசித்துப் பார்த்தால் அதன் தொன்மை புரியும்.

பழமொழி நானூறு பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. கல்வி, ஒழுக்கம், பொருள், முயற்சி, நட்பு, அரசியல், நன்றி, காரியம் முடிக்கும் சாதுர்யம், இல்வாழ்க்கை, இப்படி அது தொட்டுச் செல்லும் தலைப்புகள் அதிகம். பகைவனை எப்படி சமாளிப்பது என்று கூட பாடல்கள் உண்டு. இதோ ஒரு உதாரணம்.

இயற்பகை வெல்குறுவான் ஏமாப்ப முன்னே
அயற்பகை தூண்டி விடுத்தோர் - நயத்தால்
கறுவழங்கிக் கைக்கெளிதாய்ச் செய்க அதுவே
சிறுகுரங்கின் கையாற் றுழா.

தனது பகைவனை வெல்ல நினைப்பவன், முதலில் தனது பகைவனுக்கு எதிராக இன்னொரு பகையை வெளியே இருந்து தூண்டி விட்டு ஒரு குழப்ப நிலையை உருவாக்கி, தமது பகை தீர்ப்பதற்கு சாதகமான நிலையை உருவாக்கலாம். பெரிய குரங்கு வேகின்ற கூழை சிறிய குரங்கின் கையாயால் கிளறி விடுவது போல. ’சிறுகுரங்கின் கையாற் றுழா’ என்பது பழமொழி. பகையைப் பற்றிய வகையில்  இந்த பழமொழி வந்தாலும், இதை வணிகத்தில், செய்யும் தொழிலில், போட்டியாளர்களை சமாளிக்கும் விஷயத்தில் பொருத்திப் பார்க்கலாம்.

இந்த பழமொழியெல்லாம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பேச்சு வழக்கில் இருந்துள்ளது. சிக்கலான நிர்வாக தத்துவமெல்லாம் சர்வ சாதாரணமா பழமொழியா பேசியிருக்காங்க. வரலாற்றில் படிச்சிருக்கோம், பழங்காலத்தில் தமிழர்கள் வாணிபத்தில் வல்லவராய் இருந்தார்கள், கடல் கடந்து வாணிபம் செய்து நிறைய பொருள் சம்பாதித்தார்கள் என்று. இந்த நிர்வாகத் தெளிவு கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுதான் இன்றைக்கும் முத்தையா மாதிரி வியாபாரிகளுக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கு போல.

மதிக்கலையின் இயக்கமும் உடல் தூய்மையும்

எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்
துய்யது சூக்கத்து தூலத்த காயமே – 851

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே எய்துவது தூலம். இரு வகை பக்கத்துள், எய்தும் கலை போல, ஏறி இறங்குமாம். துய்யது சூக்கத்து தூலத்து காயமே.

விளக்கம்:
அமுரி தாரணை பற்றி முந்தைய பாடல்களில் பார்த்தோம். தொடர்ந்த அமுரி தாரணையின் அடுத்த கட்டமே சந்திர யோகம் (மதிக்கலை) ஆகும். மனவுறுதியுடன் யோகப் பயிற்சியில் நிலைத்து நின்று சகசிரதளத்தில் அமுதம் ஊறச் செய்யும்போது, அவ்வமுதம் மற்றும் மூச்சுக்காற்றின் இயக்கம் நம்முடைய பருவுடலில் (தூலம்) இருந்து சூட்சும உடலுக்கும் (சூக்கம்), சூட்சும உடலில் இருந்து பருவுடலுக்கும் ஏறி இறங்குவதை உணரலாம்.

சந்திரனின் கலைகள் (வளர்பிறை, தேய்பிறை என) இரு பக்கங்களிலும் ஏறி இறங்குவது போல, இந்த யோகத்தில் சந்திரக்கலையானது தூலத்திலும் சூக்கத்திலும் இயங்கும். இத்தகைய சந்திர யோகம் கைவரப் பெற்றால், சூட்சும உடலாகிய நுண்ணுடல் தூய்மை பெறுவதுடன், நம் மெய்யாகிய பருவுடலும் (காயம்) முழுமையாகத் தூய்மை (துய்யது) அடையும்.

மதிக்கலை – சந்திரக்கலை, சூக்கம் – சூட்சுமம், தூலம் – பருவுடல், துய்யது – தூய்மையாவது, காயம் – உடல்

Verse 851 marks the evolution from static meditation to Chandra Yoga, a dynamic state of internal alchemy where the divine nectar (Mathikkalai) begins to rhythmically oscillate between the physical (Sthula) and subtle (Sukshma) bodies. Just as the moon cycles through its waxing and waning phases, this spiritual essence is no longer stationary; it rises into the subtle consciousness and descends back into the physical frame, creating a continuous loop of energy that bridges the gap between our tangible biological existence and our invisible energetic blueprint. This “rising and falling” serves as a profound internal tide that washes away impurities, effectively “bleaching” the grossness from the physical cells and stabilizing the light of the subtle body. Ultimately, this circulation transforms the practitioner into a Thuyya Kayam—a sacred, purified vessel where the material and spiritual dimensions are so perfectly harmonized that the body attains the resilient, luminous quality sought by the Siddhas.

यथा कला द्विपक्षेषु ह्यारोहत्यवरोहति ।
तथा सूक्ष्मञ्च स्थूलञ्च देहं तुय्यं प्रजायते ॥

Yathā kalā dvipakṣeṣu hyārohatyavarohathi |
Tathā sūkṣmañca sthūlañca dehaṃ tuyyaṃ prajāyate ||


Insight

Verse 851 marks the evolution from static meditation to Chandra Yoga — a dynamic state of internal alchemy where the divine nectar (Mathikkalai) begins to rhythmically oscillate between the physical (Sthula) and subtle (Sukshma) bodies. Just as the moon cycles through its waxing and waning phases, this spiritual essence rises into the subtle consciousness and descends back into the physical frame, creating a continuous loop of energy. This circulation transforms the practitioner into a Thuyya Kayam — a sacred, purified vessel where the material and spiritual dimensions are perfectly harmonised.


Sanskrit Alignment with Source Concepts

First line — Lunar ascent and descent

यथा कला द्विपक्षेषु ह्यारोहत्यवरोहति

Corresponds to the dynamic state of Chandra Yoga, where Mathikkalai rhythmically rises and falls like the waxing and waning moon across its two fortnights (இருவகைப் பக்கத்துள்).

Second line — Purification of both bodies

तथा सूक्ष्मञ्च स्थूलञ्च देहं तुय्यं प्रजायते

The continuous loop bridges subtle consciousness and the gross physical body, transforming the practitioner’s body into a pure vessel — Thuyya Kayam (துய்யது காயமே).


Word-by-Word Glossary

Yathā — यथा
Just as
போல

Kalā — कला
Lunar phase, divine nectar
மதிக்கலை, சந்திரக்கலை

Dvipakṣeṣu — द्विपक्षेषु
In the two fortnights
இருவகைப் பக்கத்துள்

Hyārohatyavarohathi — ह्यारोहत्यवरोहति
Rises and descends
ஏறி இறங்குமாந்

Tathā — तथा
Similarly, in the same way
அதுபோல

Sūkṣmañca — सूक्ष्मञ्च
The subtle body
சூக்கத்து, சூட்சும உடல்

Sthūlañca — स्थूलञ्च
The gross physical body
தூலத்த, பருவுடல்

Dehaṃ — देहं
Body, vessel
காயமே

Tuyyaṃ — तुय्यं
Pure, purified
துய்யது

Prajāyate — प्रजायते
Becomes, is transformed
தூய்மை பெறும்

சந்திர யோகம் – ஒரு அறிமுகம்

இது அட்டாங்க யோகத்தின் நிறைவுப் பகுதி. அதனால் சந்திர யோகத்தை யோக நெறியின் உச்ச நிலையாகக் கொள்ளலாம். நிலவையும் அமுதையும் தொடர்புபடுத்திப் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். யோக நிலையில் நிலவொளியின் குளுமையைத் தலையுச்சியில் (சகசிரதளம்) உணர்வதால், ‘சந்திர யோகம்’ என்னும் பெயர் இதற்குப் பொருத்தமாக உள்ளது. இந்த உச்சபட்ச யோக நிலையை உணர்த்தவே சிவபெருமான் தலையில் பிறைச் சந்திரனைக் காண்கிறோம். ‘சந்திரசேகரன்’ என்னும் பெயரும், உச்சந்தலையில் அமுதத்தைச் சேகரிப்பவர் என்ற பொருளைத் தருகிறது.

இந்த நிலையைப் பற்றி ‘சிவ சம்ஹிதா’ என்னும் நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

अधोवक्त्रं च यत्पद्मं सहस्रारं व्यवस्थितम् |
तन्मध्ये चन्द्रमाः शुद्धः कलाभिः पूरितः सदा ||
तस्मात् पीयूषधारा च स्रவति सततं प्रिये |

Adhovaktram cha yat-padmam sahasraram vyavasthitam |
Tan-madhye chandramah shuddhah kalabhih puritah sada ||
Tasmat piyusha-dhara cha sravati satatam priye |

பொருள்: தலையின் உச்சியில், இதழ்கள் கீழ்நோக்கி இருக்குமாறு அமைந்துள்ள ‘சகஸ்ராரத் தாமரை’ உள்ளது. அதன் மையத்தில், எப்போதும் கலைகள் நிரம்பிய தூய்மையான சந்திரன் (சந்திர மண்டலம்) வீற்றுள்ளது. அந்தச் சந்திரனிடமிருந்து எப்போதும் அமுத தாரை (பியூஷதாரா) இடைவிடாமல் வழிந்து கொண்டிருக்கிறது.

சித்தர் மரபில் ‘அமுரி’ அல்லது ‘சிவநீர்’ என்று போற்றப்படும் இந்த அமுதத்தைப் பருகுவதே யோகத்தின் இறுதி இலக்காகும். இதுவே மரணமில்லாப் பெருவாழ்வுக்கும், இறை நிலைக்கும் வழிவகுக்கிறது.

சிவநீரே தெய்வ மருந்து

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே – 850

விளக்கம்:
கிடைக்க அரிதான அமுரி என்னும் சிவநீரை வீர மருந்தென்றும், தேவ மருந்தென்றும், ஆதி பராசக்தி தந்த மருந்தென்றும் நந்தியம்பெருமான் உரைத்திருக்கிறார். சிவநீரை தமது சகசிரதளத்தில் உணர்ந்து அனுபவம் பெற்றவர்கள், அந்த அமுரியை ஆதிப்பொருளான சிவபெருமான் தமக்கு அளித்த ஆதி மருந்து என்பதை உணர்வார்கள். பெரிதும் அகன்ற இந்த உலகத்துக்கு அருள் செய்யும் அந்தப் பெருஞ்சோதி தரும் இந்த மருந்தின் பெருமை பற்றிச் சொல்ல மொழியின் வார்த்தைகள் காணாது.

  • வீர மருந்து: மனதிடம் கொண்ட யோகியர் (வீரர்கள்) கையாளுவதால்.

  • விண்ணோர் மருந்து: தேவர்கள் உண்ணும் அமிர்தத்திற்கு இணையானது என்பதால்.

  • நாரி மருந்து: ‘நாரி’ என்பது இங்கே சக்தியைக் குறிக்கும் (குண்டலினி சக்தி அல்லது உண்ணாக்கு வழியாகச் சுரக்கும் சக்தி நீர்).

  • ஆதி மருந்து: ஆதிப்பொருளான சிவபெருமான் நமக்கு அருளும் மருந்து

சிவநீரின் மருத்துவ குணம்

அளக நன்னுத லாயோர் அதிசயம்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே – 849

விளக்கம்:
சுருள் முடியும், அழகிய நெற்றியும் கொண்ட பெண்ணே! ஒரு அதிசயத்தைச் சொல்கிறேன். கேள் இதை – நம் எல்லோருடைய உடலிலும் சிவநீர் கலந்து உள்ளது. அது ஒரு களவுப் பொருளைப் போல ஒளிந்துள்ளது. யோகப்பயிற்சியில் உறுதியாக நிலைத்து நின்றால், அச்சிவநீரை நாம் கண்டடைந்து அந்நீரை நுகரலாம். யோகப் பயிற்சியின் முக்கிய அங்கமான அமுரிதாரணை செய்வதன் மூலம் மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு ஆகிய நான்கு பொருட்களின் மருத்துவக் குணங்களும் ஒருங்கே அமைந்த அந்தச் சிவநீரை (அமுரி) உச்சந்தலையில் தேக்கிப் பழகினால், உடல் இளமை பெற்று மென்மையாகும் (இளகும் மேனி). நரை மறைந்து தலைமயிர் காகத்தின் சிறகு போலக் கருமை நிறம் பெறும் (இருளும் கபாலமே).

  • அளக நன்னுதல்: கூந்தலும் அழகிய நெற்றியும் உடையவள் (சக்தி அல்லது பெண்ணைக் குறிக்கும் விளி).

  • களவு காயம்: மாயையால் மறைக்கப்பட்டுள்ள உடல்.

  • வேம்பிடில்: வேப்பிலையின் குணம் போல உடலின் கசடுகளை நீக்குதல்.

  • இருளும் கபாலமே: தலை உச்சிப் பகுதியில் உள்ள முடி கருமையடைதல் (நரை நீங்குதல்).

யோகத்தின் எல்லை: தெளிந்த சிவநீர் தரும் அழியா வாழ்வு

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே – 848

விளக்கம்:
யோக நெறியில் நின்று பயிற்சி செய்பவர்கள், தமது குறுகிய காலப் பயிற்சியில் ‘சிவநீர்’ (அமுத ஊற்று) சுரக்கத் தொடங்கிய முதல் நிலையிலேயே, “இதுதான் யோகத்தின் எல்லை” என்று மதியிலாமல் அங்கேயே நின்று விடுகிறார்கள்.

முதலில் ஊறும் அந்தச் சிவநீர் நுரை மற்றும் திரைகளுடன் (அசுத்தங்களுடன்) கூடிய உப்பு நீராக இருக்கக்கூடும். ஆனால், யோகப் பயிற்சியில் மென்மேலும் ஆழ்ந்து செல்பவர்கள், அந்த நுரைகளை நீக்கித் தெளிந்த சிவநீரைப் பருகும் ஆற்றலைப் பெறுவார்கள்.

ஆற்றின் கரை அருகே நின்று கலங்கிய நீரைப் பருகுவதற்கும், ஆழத்திற்குச் சென்று தெளிந்த நீரைப் பருகுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ஆழ்ந்த யோக நிலையில் தெளிந்த சிவநீரைப் பருக வல்லவர்களுக்கு:

  • நரைமுடி மீண்டும் கருமையாகும்.

  • திரை (கண் மறைப்பு/முதுமைத் தளர்ச்சி) நீங்கிப் பார்வை தெளிவடையும்.

  • காலன் (எமன்) அணுகாத நீடித்த ஆயுள் கிட்டும்.

முடிவுரை:
யோக அனுபவம் என்பது ஒரு மகா கடல் போன்றது. அதைக் கரையருகே நின்று வேடிக்கை பார்க்காமல், பயிற்சியால் உள்ளே இறங்கி நீந்தி, பேரானந்தம் எனும் அமுதத்தைப் பெறுவோம்.

வரை – எல்லை, உவரி – கடல்/உப்பு நீர், நமன் – எமன்/மரண பயம்.

சிவநீர் தாரணையும் நரைநீக்கமும்

நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே – 847

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தலை உச்சியில் மனத்தை நிறுத்தி தியானம் செய்யுங்கள். தலை உச்சியில் உள்ள சகசிரதளத்தில் மனம் குவியும் போது, அந்த வெளி இளகி சிவநீர் ஊறும், அதனை நுகருங்கள். ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் சகசிரதளத்தில் ஊறும் அந்நீருக்கு இணையான சிறந்த மருந்து வேறு ஒன்றில்லை. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தங்கள் கவனத்தை தலை உச்சியிலேயே நிறுத்தி நிலை பெறச் செய்வார்கள். அமுரி எனப்படும் இந்தச் சிவநீரை தாரணை செய்பவர்களுக்கு கருத்த மறுமயிர் முளைப்பதைக் காணலாம்.

நூறு மிளகு நுகரும் – நூறும் + இளகும் + நுகரும், சிவத்தினீர் – நம் தலை உச்சியில் ஊறும் சிவநீர்

தெளிதரும் சிவநீர்

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே – 846

விளக்கம்:
யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுரி என்னும் அமுதத்தை நுகர்ந்து வந்தால் சித்தம் தெளிவு பெறும். இவ்வரிய நிலையை தாரணை செய்து ஓராண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சிவ ஒளியைக் காணலாம், குறைவில்லா வாழ்வு கிடைக்கும். இந்நிலையில் இன்னும் நீடித்து நின்று, எட்டு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் மனம் ஒடுங்கி ஒரு நிலையில் நிற்கும், மட்டில்லா மகிழ்ச்சி பெறலாம், நம்முடைய உடல் பொன் போன்று பிரகாசம் பெறும்.

சிவநீர்  – யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம், வளி – காற்று, களி – மகிழ்ச்சி, கனகம் – தங்கம்

கடலின் நடுவே ஒரு கிணறு!

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே – 845

விளக்கம்:
இது அமுரி தாரணை என்னும் தலைப்பில் வரும் முதல் பாடலாகும். அமுரி என்பது தொடர்ந்த யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம். மிக அரிதாக சுரக்கும் அவ்வமுத நிலையை தொடர்ந்து நிலைநிறுத்தும் யோகப்பயிற்சியைப் பற்றி அமுரி தாரணை பேசுகிறது.

அமுரி என்னும் அமுதம் கிடைப்பது மிக அரிதான விஷயமாகும். அத்தனைப் பெரிய கடலின் நடுவே ஒரு சின்னஞ்சிறிய கிணறு, அந்தக் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்கு ஒப்பானதாகும் யோகப்பயிற்சியால் அமுதம் சுரக்கச் செய்வது. உடலுக்கு உறுதி தரும் அமுரி சுரக்க, ஒரே ஒரு வழி தான் உண்டு. நம் மனத்தை சுழுமுனையில் நிறுத்தி தொடர்ந்து யோகப்பயிற்சி செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், நமது உயிர் துன்பத்தில் வதைப்படாமல் சிவபெருமானின் திருவடியை நாடி நிற்கும்.

அமுரி – யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம், தாரணை – நிலை நிறுத்துதல், நடலை – துன்பம்

கேள்விப்படாத பூ ஒன்று உண்டு!

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே – 844

விளக்கம்:
பரியங்கயோகத்தினால் கிடைக்கும் முக்கிய பலன் என்னவென்றால், நம் தலை உச்சியின் சகசிரதளத்தில் சிவ சக்தி சேர்க்கையினால் அங்கே ஆயிரம் இதழ் கொண்ட தாமரை ஒன்று மலர்வதை நாம் உணரலாம். நாம் இதுவரை கேள்விப்படாத அந்த தாமரை மலர நிலமும் தேவையில்லை, நீரும் தேவையில்லை. அத்தாமரைக்கு அரும்புமில்லை, வேருமில்லை. சூரிய ஒளியோ சந்திர ஒளியோ இல்லாமலேயே ஒளி வீசும் தன்னொளி கொண்டது, நமது தலை உச்சியில் உள்ள சகசிரதள தாமரை. அந்தத் தன்னொளிக்கு கீழ் திசை என்பதோ மேல் திசை என்பதோ கிடையாது, முழுமையான ஒளி அது.

பங்கயம் – தாமரை, தார் – அரும்பு, ஊர் – சூரிய ஒளி

இதம் தரும் பராசக்தி

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே – 843

விளக்கம்:
ஒரு சுழலின் உள்ளே அகப்பட்டாற் போல, யோக நிலையின் கும்பகத்தில் நின்று தன்னைத் தானே ஆகுதி செய்யும் யோகிகளுக்கு முதுமை என்பதே கிடையாது. கறுத்த தலைமயிருடன் எப்போதும் இளமையாக இருப்பார்கள். நம்முள்ளே குடியிருக்கும் பராசக்தி என்றும் நமக்கு துணை இருந்து இதம் தருவாள். நம்முடைய யோகநிலையின் பக்குவம் அறிந்து, நம்மை இந்த உலக பந்தத்தில் இருந்து விடுவிப்பாள்.

உதம் – தன்னை ஆகுதி செய்தல் (ஹிதம் என்பதன் திரிபு), ஒரு சுழி – சுழல் போன்ற ஒரு ஆன்மிக நிலை, கதம் – ஓட்டம், பதம் – பக்குவம்