Month: April 2012
வில்லி பாரதத்தில் இருந்து ஒரு பாடல்
பச்சென்றதிருநிறமுஞ்சேயிதழும் வெண்ணகையும் பார்வையென்னும் நச்சம்புமமுதூற நவிற்றுகின்ற மடமொழியு நாணும்பூணும் கச்சின்கணடங்காதகனதனமும் நுண்ணிடையுங்கண்டு சோர்ந்து பிச்சன்போலாயினனப்பெண்கொடிமெய்ந் நலமுழுதும் பெறுவானின்றான்.
பாண்டியன் மகள் சித்திராங்கதையைக் கண்டு அர்ச்சுனன் இவ்வாறு ஏங்குகிறான்.
பசுமையான அழகிய நிறத்தையும், செந்நிறமான அதரத்ததையும், வெண்ணிறமான பற்களையும், கண்ணின்பார்வை யென்கிற விஷந்தீற்றிய அம்பையும், அமிருதம்போன்ற மிக்க இனிமையாய் பேசுகின்ற அழகிய பேச்சுக்களையும், நாணமென்னுங் குணத்தையும், தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும், நுண்ணியஇடையையும் பார்த்து மனந்தளர்ந்து பித்துக்கொண்டவன் போலாயினான்.