வானில் நிற்கும் திங்கள்

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே. – (திருமந்திரம்)

விளக்கம்:
நாள்தோறும் நிலையாய் நின்று வழிபடுவேன் என் இறைவனை. அந்த இறைவன் எரியும் நெருப்பைப் போன்ற வெளிச்சமுடையவன். வானில் நிற்கும் நிலவினைப் போல என் உடலினுள் வந்து பொருந்தி நிற்கின்றான், நான் உயிர்த்திருக்குமாறு.

One thought on “வானில் நிற்கும் திங்கள்

  1. அருமையான எளிமையான விளக்கத்துடன்
    திருமந்திரப் பாடலை பதிவாககித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

Comments are closed.