செய்வதை புரிந்து செய்க

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமானின் அருளால் சொல்லப்பட்ட ஆகமங்கள் எண்ணிக்கையில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த இறைவன் அருளிய உண்மைப் பொருளை புரிந்து கொள்ளாவிட்டால் அந்த எண்ணிலடங்கா கோடி ஆகமங்களும் நீர் மேல் எழுதியது போலாகும்.

2 thoughts on “செய்வதை புரிந்து செய்க

  1. ஆகமங்களுக்கு மட்டுமல்லாது
    அனைத்திற்குமே பொருந்து கிற அருமையான பாடலை
    அருமையான தெளிவுரையுடன் பதிவாக்கித்
    தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

Comments are closed.