சிவன் நமக்கு நண்பன்

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.  – (திருமந்திரம்)

விளக்கம்:
சிவபெருமான் தன்னை வணங்கி வாழ்த்த வல்லவரின் மனத்தில் அறிவுப் பேரொளியாய் தோன்றுவான். புனித தீர்த்தமானவனை, அந்த தீர்த்தங்களிலே திளைக்கின்ற ஈசனை துதித்தும் எம்பெருமானே என்று வணங்கியும் நட்பு கொண்டு அந்த ஈசனின் அருளப் பெறலாம்!

(ஆத்தம் செய்து – நட்பு செய்து)

Lord Siva, shining lamp of knowledge in Devotees' Heart,
He is the Holiness of Holy Water
We shall Praise and Worship 'OUR LORD'
Thus we attain his Grace, being friendly with Him.

One thought on “சிவன் நமக்கு நண்பன்

  1. உங்கள் பதிவுகள் இரண்டு மூன்றை கவனித்து வருகிறேன்..திருமந்திரப் பாடல்களைப் பற்றி எழுதும் முயற்சிக்கு நன்றி. இன்னும் விவரித்து எழுதலாமே…

Comments are closed.