விதிகளினால் மட்டும் ஆகாது!

பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. – (திருமந்திரம் –33)

விளக்கம்:
இந்த பண்டைய உலகில், இதுவரை பல கடவுள்களின் பெயரில் பல வித விதிகளை ஏற்படுத்தியும் யாரும் உண்மை ஞானத்தை அறியவில்லை. கடவுளை  துதித்துப் பல பாடல்கள் பாட வல்லவர்கள் கூட உண்மையான ஞானம் இல்லாதவராய், உள்ளத்தில் அமைதி இல்லாமல் வாடுகின்றார்.

(மத விதிகளை கடைபிடிப்பதாலும், இறைவனை நோக்கி பாடல்கள் பாடுவதால் மட்டுமே ஞானம் அடைவது கடினம். மெய்ப்பொருளை நோக்கிய தேடலும் தவமும் அவசியம்.)

This very old world have seen many Gods,
many Rituals, but no one knows the truth.
Even those who sing Songs in praise of God,
Lacks of true Knowledge, with no peace in heart.