வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தனம்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. – (திருமந்திரம் – 21)
விளக்கம்:
வானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய நிறம் கொண்ட திருமால், பிரமன் மற்றும் தேவர்களின் இழிந்த பிறவியை நீக்கியவன் சிவபெருமான். அப்பெருமான் காட்டு யானை போன்ற நம் ஆணவத்தைக் கதறும்படி பிளந்தவன். அத்தலைவனைப் போற்றிப் புகழ்ந்திருந்தால், அவனுடன் இரண்டறக் கலந்திருந்து பேரின்பம் பெறலாம்.
He is the one who remove birth and death cycle of Lord Thirumal, Lord Brahma and other Devas. He is the one who destroys our wild elephant like egotism. Let us praise Him and be in close with Him.