பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத முமளித் தானெங்கள் நந்தியே. – (திருமந்திரம் – 89)
காளை, மான், மழு ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் கொண்டிருக்கும் சிவபெருமானின் கற்பனையாக அமைந்தது இந்த உலகம். அந்த சிவபெருமான் எனக்கு இந்த கற்பனையான உலகத்தின் மீதுள்ள பற்றினை நீக்கி, என் தலையின் மீது தன் திருவடியை வைத்து அருளினான்.
(பெற்றம் – காளை, மழு – சிவனின் கையில் உள்ள ஆயுதம், தற்பரன் – பரம்பொருள், சராசரம் – பிரபஞ்சம், அற்றம் – நீக்கம்)
கையில் மானும் மழுவும் கொண்டுள்ள சிவன்.