தானொரு கூறு சதாசிவன் எம்மிறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே. – (திருமந்திரம் – 112)
விளக்கம்:
எம் இறைவனான சதாசிவன் உலகில் உள்ள எல்லாப் பொருளிலும் தான் ஒரு அங்கமாக விளங்குகிறான். வானுலகிலும் தான் ஒரு அங்கமாக எல்லாவற்றிலும் கலந்திருக்கிறான். எம் தலைவனான அவன் என் உடலில் உயிராக கலந்திருந்து என் ஒவ்வொரு அசைவிலும் அவன் விளங்கிறான்.
(கூறு – பகுதி, மருவி – கலந்து, கோன் – தலைவன், சலம் – அசைவு)