நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின். மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பு - அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே! - பெரியாழ்வார்.
நெய்க் குடத்தைப் பிடித்து ஏறும் எறும்புக் கூட்டத்தைப் போல, என் உடலெங்கும் பரவி நிற்கும் நோய்களே! தப்பித்து ஓடி விடுங்கள். வேதங்களின் தலைவனான எம்பிரான், தனது பாம்புப் படுக்கையுடன் வந்து என்னுள்ளே வசிக்கிறார். இந்த உடலாகிய ஊர் முன்பு போல் இல்லை, இப்போது பெருமாளின் பாதுகாவல் உள்ளது.
இந்தப் பாடலைப் படிக்கும் போது எனக்காகவே, அதுவும் இந்த சமயத்திற்காகவே எழுதப்பட்டது போல தோன்றுகிறது.