பொதுமகளிரிடம் செல்லும் நண்பரை தடுத்து நிறுத்துங்கள்

கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்
ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.  – (திருமந்திரம் – 208)

விளக்கம்:
மனஉறுதி இல்லாத கோழைகள் தான் பொதுமகளிரைத் தேடிப் போவார்கள். அவர்களின் இந்தச் செயல்  பாசி படர்ந்த குளத்தினில் மூழ்குவது போன்றதாகும். விவேகம் உள்ள அவரது நண்பர்கள் அவரை அந்தப் பாதைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கோழைகள் மீள முடியாத படுகுழியில் விழுந்து விடுவார்கள்.