எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே. – (திருமந்திரம் – 570)
விளக்கம்:
நாம் எந்த இடத்தில் இருந்தாலும் இடது பக்க மூக்கு வழியாக மூச்சை இழுத்து நிறைவு செய்யும் பயிற்சியைத் தொடர்ந்து செய்வோம். அவ்வாறு பூரகம் செய்தால் இந்த உடலுக்கு அழிவு உண்டாகாது. அவ்வாறு இழுத்த மூச்சை நிறுத்தி கும்பகம் செய்து, வலது பக்க மூக்கு வழியாக மூச்சை வெளியேறச் செய்தால் சங்க நாதம் உண்டாகி மேன்மை ஏற்படும்.
பூரகம் செய்து பூரிப்பு பெறுவோம்.
பூரி – பூரகம், இடத்திலே – இடப்பக்கமாக, தலைவன் – மேன்மையானவன்