தியானம் – மன விளக்கை ஏற்றுவோம்

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.  –  (திருமந்திரம் – 602)

விளக்கம்:
உள்ளத்தில் விளங்கும் விளக்கொளியை நன்றாக ஏற்றுவோம். சினம் என்னும் தீ மனத்தை விட்டு நீங்குமாறு செய்வோம். தியானம் செய்து மனத்தில் உள்ள விளக்கின் எல்லா திரிகளையும் ஒரு சேரத் தூண்டினால் நம்  உள்ளத்தின் விளக்காக ஒளிரும் சிவன் மங்காதிருப்பான்.

மாண் – மாட்சிமை,  மாயா விளக்கு – அணையா விளக்கு