அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. – (திருமந்திரம் – 223)
விளக்கம்:
வேள்விகளைத் தவறாது செய்து வரும் அந்தணர்கள், இந்த உலகில் வேதங்கள் நிலைத்து நிற்க வகை செய்தவர் ஆவார்கள். அவர்கள் பெருந்தவம் செய்தவர்கள். உலகெங்கும் அவர்கள் வேள்வித்தீயை நிலை நிறுத்துவதால், துன்பங்கள் எல்லாம் சோர்ந்து தொலைந்து போகும். இதனால் வேதங்களின் புகழ் உலகில் என்றும் நிலைத்து நிற்கும்.