சிவபெருமானின் கோபம்

தந்தைபி ரான்வெகுண் டாந்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.  – (திருமந்திரம் – 353)

விளக்கம்:
தக்கன் தீ வளர்த்துச் செய்த தனது வேள்வியில், தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானுக்கு முதல் ஆகுதியைச் செய்யத் தவறினான். அங்கிருந்த தேவர்களும் தக்கனுக்கு அறிவுறுத்தவில்லை. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி வேள்வியில் ஈடுபட்டிருந்த தக்கனையும், தேவர்களையும் அழித்தான்.