எல்லாமே சிவத்தன்மை தான்

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.  – (திருமந்திரம் – 356)

விளக்கம்:
பிரமன், திருமால் முதலிய தேவர்கள் அனைவருக்கும் உள்ள தெய்வத்தன்மைக்குக் காரணம் சிவபெருமானே ஆவான். வேள்வித்தீயின் அக்னித்தன்மையாக விளங்குபவனும் சிவபெருமானே!