எலும்பும் கபாலமும் ஏந்திய வலம்பன்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே. – (திருமந்திரம் – 371)

விளக்கம்:
எலும்பும் கபாலமும் ஏந்தி வலம் வரும் சிவபெருமான், தேவர்களுக்கெல்லாம் மூத்தவன் ஆவான். அவன் எலும்பும் கபாலமும் ஏந்தாவிட்டால், இந்த உலகம் பரிணாம வளர்ச்சி இல்லாமல் எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விடும்.

One thought on “எலும்பும் கபாலமும் ஏந்திய வலம்பன்

Comments are closed.