இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே. – (திருமந்திரம் – 422)
விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களில் கற்ப சங்காரம் என்பதும் ஒன்று. அச்சங்காரத்தின் போது இந்த மொத்தப் படைப்பும் அழிக்கப்படும். அந்நிகழ்வை கற்பனை செய்து பார்த்தால், கற்ப சங்காரத்தின் போது இந்த உலகம் உலையில் கொதிக்கும் மெல்லிய அரிசி போல் உழன்று தவிக்கும். அப்போது மலைகள் நிரம்பிய பெரிய நிலப்பகுதிகளும் கூட எரிந்து அழியும்.
சங்காரம் – அழித்தல்