மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே. – (திருமந்திரம் – 477)
விளக்கம்:
தாயின் வயிற்றில் உண்டாகும் குழந்தை ஆணா, பெண்ணா, அலியா என்பதெல்லாம் முக்கியம் இல்லை. உடலோடு உயிராகத் தோன்றி வளர்வது பெருமையான விஷயம். எந்தக் குழந்தையாக இருந்தாலும், அது தாய் தந்தையின் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் எல்லாம் இந்த உடலைப் பெற்றிருப்பது சிவபெருமானின் வல்லமையினாலே!