கருவைச் சுமக்கும் தாய் கவனிக்க வேண்டியது!

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.  – (திருமந்திரம் – 481)

விளக்கம்:
கருவைச் சுமக்கும் தாயின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால், பிறக்கும் குழந்தை மந்த புத்தி உடையதாக இருக்கும். தாயின் வயிற்றில் நீர் மிகுந்திருந்தால், பிறக்கும் குழந்தை ஊமையாக இருக்கும். மலமும் நீரும் மிகுந்திருந்தால், குழந்தை குருடாகப் பிறக்கும்.