குழந்தையைத் தீர்மானிக்கும் மூச்சுக்காற்று!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.  – (திருமந்திரம் – 482)

விளக்கம்:
ஆண் பெண் கலவியின் போது, ஆணின் மூச்சு வலப்பக்க நாசியில்  (சூரியகலை) இயங்கினால் பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கும். மூச்சு இடப்பக்க நாசியில் (சந்திரகலை) இயங்கினால் பிறப்பது பெண் குழந்தையாகும். அந்நேரம் பிராண வாயுவை அபானன் என்னும் மலக்காற்று எதிர்த்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும். இரண்டு நாசியிலும் மூச்சுக்காற்று ஒரே அளவு இயங்கினால் பிறக்கும் குழந்தை அலியாகும்.