கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்அனல் காற்றது வாமே. – (திருமந்திரம் – 514)
விளக்கம்:
தியானத்தினால் உள்ளே உறும் தீர்த்தம் உடலினில் கலக்கும் போது உடல் சிவக்கும், முடி கறுக்கும், உடல் முழுவதும் தூய்மையாகும். மேலும் நம்மைச் சுற்றி உள்ள நிலத்திலும் காற்றிலும் அந்த தீர்த்தத்தின் புனிதம் கலந்து நிற்கும்.