முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. – (திருமந்திரம் – 518)
விளக்கம்:
சிவன் கோயில்களில் பூசைகள் நிகழாமல் தடைப்பட்டால், நாடாளும் மன்னர்க்கு தீமை உண்டாகும். நாட்டில் செல்வ வளம் குறையும், களவு மிகும். என்னருமை நந்தியம்பெருமான் இவ்வாறு உரைத்துள்ளான்.