விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே. – (திருமந்திரம் – 664)
விளக்கம்:
முந்தைய பாடலில் பார்த்தது போல் குண்டலினியாகிய சக்தி மேலெழும் போது பல கூறுகளாகப் பிரிகிறது. பிராணாயாமத்தின் போது சக்தி நம் மூச்சில் மறைந்து கலந்து எழுந்து குவிகிறது. மேல் எழுந்து குவிந்து நம் உச்சியில் மறைந்திருக்கும், ஐம்பூதங்களுக்கும் காரணமான, சிவபெருமானைச் சென்று கூடும்.
Also published on Medium.