இரு வரிக் கதை – 09

”எல்லாரும் அமைதியா வரிசைல வாங்கப்பா!” சலிப்புடன் சொன்னார் சித்ரகுப்தர். “நீங்க என்ன எங்கள வரிசப்படியா கூட்டிட்டு வந்திருக்கீங்க?” வரிசையில் இருந்து ஒரு இளவயதுக் குரல் கேட்டது.


இரு வரிக் கதை – 06

 “இரண்டாயிரத்து எண்பத்து எட்டாம் வருடத்தைச் சேர்ந்த கடைசி மனிதனான நான் வாரிசு வேண்டி எழுபத்தைந்து வருடம் பின்னோக்கி வந்துள்ளேன்” என்றான் அவன். முட்டாள் பெண் அதை நம்பி விட்டாள்!


இரு வரிக் கதை – 05

அந்தப் பெண்  என் கையை ஆசையுடன் எடுத்து தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினாள். இரண்டு நாட்களாக ஃப்ரீஸரில் இருந்த என் கை சில்லிட்டிருந்தது.


இரு வரிக் கதை – 04

புது வீட்டுக்கு குடி வந்த அவர், அன்றிரவு தனது அறையின் விட்டத்தில்  இரு காலடித் தடங்கள் ஈரத்தோடு இருப்பதைப் பார்த்து குழப்பமாகப் பயந்தார். அவருடைய ஆறு வயதுப் பெண், தனது சிரிப்பை அடக்க முடியாமல் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள்.


இரு வரிக் கதை – 03

 “இன்னைக்கு ஒனக்கு அன்லிமிட்டெட் ப்ரௌசிங் ஆஃபர்” என்றபடி கண் சிமிட்டி அழைத்தாள் அவள். புரிந்து செயலில் இறங்கிய அவன், தொப்புள் பக்கம் வந்தவுடன் சந்தேகத்துடன் அவள் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டான்.


இரு வரிக் கதை-02

 “அப்பா! என் பெட்ரூம்ல கண்ணாடி போட்ட பையன் ஒருத்தன் வந்து படுத்திருக்கான், யாருன்னே தெரியலே!”. சொன்ன பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது! எனக்கு பெண் குழந்தையே கிடையாது, ஒரே ஒரு பையன் மட்டும் தான், கண்ணாடி அணிந்திருப்பான்.