கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. – (திருமந்திரம் – 177)
விளக்கம்:
இந்த உலகம் மிகவும் வியப்பானது. கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன் மாலையில் மேற்கே மறையும் போது, நமக்கு ஒருநாள் வயசு அதிகமாகி விட்டது என்பதை நாம் உணர்வதில்லை. இதை உணராத நாம் கண்ணிருந்தும் குருடராக இருக்கிறோம். இளங்கன்று ஒன்று வெகு சீக்கிரம் வளர்ந்து எருதாகி பிறகு தளர்ந்து விடுவதைப் பார்க்கிறோம். இதைப் பார்த்தும் நம் இளமை நிலையில்லாதது என்பதை நாம் உணர்வதில்லை.