வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. – (திருமந்திரம் – 1774)
விளக்கம்:
நம் சிவபெருமானை வழிபடும் முறையை நாம் இவ்வாறு நிர்ணயம் செய்து, அதன்படி தொடர்ந்து செய்யலாம். பொங்கி வரும் கங்கை நீரையும், மலர்களையும் ஏந்தி சிவநாமம் சொல்லி பூஜித்து அவன் அருளை உணரலாம். அப்படி செய்து வருபவரை விட்டு சுருள் முடி கொண்ட ஈசன் நீங்க மாட்டான்.
தினமும் சிவபெருமானை நீரும், பூக்களும் கொண்டு வணங்கி சிவநாமம் சொல்லி வந்தால் அந்த ஈசன் நம்மை விட்டு நீங்காதிருப்பான். இது மிகவும் எளிமையான முறையாகும்.
(வரை – நிர்ணயம், நிரைத்து – பொங்கி, புரைத்து – தப்புதல்)
There is a simple way to worship Lord Siva. For those who worship with water & flowers in hand, Chanting his Holy name to feel His Grace, the Lord will be with them always.