சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. – (திருமந்திரம் – 34)
விளக்கம்:
வேந்தனான சிவபெருமான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி, கலவையான மணம் கொண்ட கத்தூரியைப் போன்றது. நிறைந்த சுடர் போன்ற ஆயிரம் சிவ நாமங்களை நாம் ஓர் இடத்தில் இருக்கும் போதும் புகழுவோம். நடக்கும் போதும் புகழ்ந்து கொண்டே நடப்போம்.
(சாந்து – கலவை, கவரியின் கந்தம் – கத்தூரி, ஆர்ந்த – நிறைந்த, போந்து – நடந்து).
வாசனைப் பொருளான கத்தூரி பற்றி தெரிந்து கொள்ள – http://en.wikipedia.org/wiki/Musk_deer
It is like the fragrance of the musk of the musk deer, the true path given to Devas given by the Lord. Like a full Glow remain His thousand names We chant them while sitting and while walking too.