பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி முறித்துவைப் பாரே. – (திருமந்திரம் –199)
விளக்கம்:
தீய உணவான மாமிசம் உண்ணுபர்கள் கீழ் மக்கள் ஆவார்கள். அவர்களை எமதூதர்கள் எல்லாரும் காணும்படியாக கறையானை அகற்றுவது போல பறித்து எடுத்துப் போய் தீ நிறைந்த நரகத்தில் மல்லாக்கத் தள்ளி கிடத்தி வைப்பார்கள்.
புலையர் – கீழ் மக்கள், இயமன் – எமன், செல் – கறையான்