காலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புக அறி யாதே. – (திருமந்திரம் – 146)
விளக்கம்:
இரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.
உங்கள் பதிவுகளில் இருந்து ஒரு சில பாடகளை எடுத்து என் முகநூல் பாகத்தில் இடலாம் என்று பார்த்தேன். copy பண்ண முடியவில்லை.
ஏன்…?
சரி பார்க்கிறேன்.
arumaiyana muyarchi. vazthukkal,