ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட்கு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. – (திருமந்திரம் –157)
விளக்கம்:
வாழ்க்கை சொல்லும் நீதி புரியாதவர்களே! இதைக் கேளுங்கள். ஒருவன் தன் விதி முடிந்து இறந்தவுடன், அவனுடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எல்லாம் ஆரவாரத்துடன் அழுது புலம்புவார்கள். பிறகு அவர்கள் ஊருக்கு வெளியே உள்ளே நீர்த்துறைக்கு வந்து திரும்புவார்கள். இறந்தவனுடைய உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மரத்தின் வேரும் நுனியும் நீக்கப்பட்ட விறகினை அடுக்கித் தீ மூட்டுவார்கள். தகனம் முடிந்தவுடன் நீரில் மூழ்கி எழுவார்கள்.
நாம் வாழும் வாழ்க்கை நிலையில்லாதது.