மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. – (திருமந்திரம் – 580)
விளக்கம்:
மூலாதாரத்திற்கு இரண்டு விரல் அளவு மேலேயும், முன்பக்கம் உள்ள பிறப்பைத் தரும் குறிக்கு இரு விரல் அளவு கீழேயும் உள்ள இடத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது குண்டலினி. அக்குண்டலினியில் இருந்து எழும் செஞ்சுடர் கொப்பூழுக்கு நாலு விரல் அளவு கீழே உள்ளது.
மூலம் – மூலாதாரம், பாலித்த – பிறப்பைத் தருகின்ற, கோலித்த – வட்டமிடும், நாபி – கொப்பூழ்