அரைகின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே. – (திருமந்திரம் – 436)
விளக்கம்:
உடலினால் கிடைக்கின்ற பலன்கள் எல்லாம் துன்பம் தருவனவாகும். இந்த உலகம் முழுவதும் எத்தனை விதமான உருவங்கள் இருக்கின்றன? ஒவ்வொருவருக்கும் எத்தனை விதமான ஆசைகள்? அவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாததாக இருக்கின்றன. இத்தனை வேறுபாடுகளிலும் நிறைந்து பரவி இருக்கும் நமது சிவபெருமான், தான் செயல்படும் விதத்தை நாம் அறியாதவாறு மறைத்து வைத்துள்ளான்.
பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி