இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே. – (திருமந்திரம் – 468)
விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பமாகக் கூடும்போது, துன்பம் மிகுந்த பிறவியைத் துவக்கும் ஒரு உயிரை அங்கே உருவாக்குகிறான் நம் சிவபெருமான். தண்ணீரை இறைக்கும் கலங்களான ஒன்பது வாசல்களையும், அவற்றை செயல்படுத்தும் பதினெட்டு உறுப்புக்களையும் கொண்டு இந்த உடல் என்னும் மண்பானையை அவன் படைக்கிறான்.