கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே. – (திருமந்திரம் – 502)
விளக்கம்:
ஒரு காலகட்டத்துக்குப் பிறகு காலன் வந்து நம் உயிரை எடுத்துக் கொள்வான் என்னும் உண்மையை வெகு சிலர் தான் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் நம் உயிரோடு கலந்திருக்கும் அந்த ஈசனை எப்போதும் தம் மனத்தில் வைத்து வழிபடுவார்கள். தன்னை நன்கு உணர்ந்தவர்களுக்கு அருள் செய்திடும் ஈசனைச் சென்று வணங்கி அவன் திருவருளை உணர்வோம். அவனை உணர்ந்தால் தேவர்களின் நிலையை அடையலாம்.