ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே. – (திருமந்திரம் – 504)
விளக்கம்:
நந்தி என்னும் பெயர் கொண்ட நம் இறைவன், முதன்மையான தகுதி உடைய அடியவரிடம் தன்னைக் வெளிப்படுத்தித் தரிசனம் தருவான். தரிசனம் பெற்ற அடியவர் தம் வாழ்வில் தெளிவு பெற்று ‘நடப்பது நடக்கட்டும், அழிவது அழியட்டும், போவது போகட்டும், வருவது வரட்டும். எது நடந்தாலும் அது இறைவனின் ஆணை’ என தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்து நிம்மதியாய் இருப்பார்.
அருமை