தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே – 846
விளக்கம்:
யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுரி என்னும் அமுதத்தை நுகர்ந்து வந்தால் சித்தம் தெளிவு பெறும். இவ்வரிய நிலையை தாரணை செய்து ஓராண்டு தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சிவ ஒளியைக் காணலாம், குறைவில்லா வாழ்வு கிடைக்கும். இந்நிலையில் இன்னும் நீடித்து நின்று, எட்டு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் மனம் ஒடுங்கி ஒரு நிலையில் நிற்கும், மட்டில்லா மகிழ்ச்சி பெறலாம், நம்முடைய உடல் பொன் போன்று பிரகாசம் பெறும்.
சிவநீர் – யோகப்பயிற்சியால் உடலில் உண்டாகும் அமுதம், வளி – காற்று, களி – மகிழ்ச்சி, கனகம் – தங்கம்
Also published on Medium.