நம்ம வீட்டில பூஜை நேரத்தில போடப்படும் சாம்பிராணிப் புகையை கவனிச்சு பார்த்திருக்கிறீங்களா? சின்ன வயசுல ரொம்ப நுணுக்கமாவே பார்த்திருப்போம். வளர வளர நம்ம observation கொறஞ்சு போயிருதே! அந்தப் புகைகள் ஒண்ணோட ஒண்ணு கலந்து அப்படியே மேல போறது எவ்வளவு அருமையான காட்சி! அப்படித்தான் கோவலனும் கண்ணகியும் ஒண்ணாக் கலந்து தன்ன மறந்து போனாங்களாம். மன்மதனும் ரதியும் கலந்து இருந்தாப் போல அவன் ஆற்றல் முழுசையும் கண்ணகிட்ட காட்ட, அவளும் தன் ஆற்றல் அத்தனையும் கோவலன் கிட்ட காட்ட, இப்படி ரெண்டு பேர் ஆற்றலும் அங்க கலந்து இருந்துச்சாம். அதுல அவங்களுக்கு ஏற்பட்ட நெறைவு கொஞ்சம் கூட கொறையலையாம். நெலயில்லாத இந்த வாழ்க்கைல முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிரணும்கிற மாதிரி இருந்ததாம் அவங்க நெலம.
தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார் காமர் மனைவியெனக் கைகலந்து-நாமந் தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று.
(தூமம் – நறும்புகை, பணி – பரவுதல், கை – ஆற்றல், நாமம் – நிறைவு)
இங்கே கை கலந்து என்பது வலிமை அல்லது ஆற்றல் கலந்து என பொருள்படுகிறது.