தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே. – (திருமந்திரம் – 557)
விளக்கம்:
தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, தானம், விரதம், கல்வி, யாகம், சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்து கடமைகளை நாம் செய்து வந்தால் நியமத்தில் நிற்கிறோம் என்று அர்த்தம்.
சந்தோடம் – மகிழ்ச்சி, சித்தாந்தம் – சிவாகமம், கேள்வி – கல்வி, மகம் – யாகம்