அறிவே உருவானவள் பராசக்தி

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே. – (திருமந்திரம் – 1054)

விளக்கம்:
நிறைந்த அறிவுடையவர்க்கு பராசக்தி ஆனந்த வடிவானவள். அவள் அறிவு வடிவமாக இருக்கிறாள். நடக்கும் எல்லா செயலும் அவள் விருப்பத்தின்படியே. அவர்கள் பராசக்தியிடம் ஈசனை காண்பார்கள்.

Those who know say, Parasakthi is in bliss form.
Those who know say, Parasakthi is in knowledge form.
Those who know say, all our deeds are as per Her desire.
They can see the Lord Siva with in Her.

2 thoughts on “அறிவே உருவானவள் பராசக்தி

    1. ’அறிவார் அருவுருவாம் அவள்’ என்று வரும். அறிவுருவாம் என்று ஓதுவாரும் உள்ளனர். அறிவுருவும் அருவுருவம் தானே!

Comments are closed.