அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. – (திருமந்திரம் – 409)
விளக்கம்:
ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, விலங்குகள், மனித இனம், தாவரங்கள் ஆகிய எல்லாம் சேர்த்து, உலகின் மொத்த உயிரின வகைகளின் எண்ணிக்கை எண்பத்து நான்கு நூறாயிரம் (8400000) ஆகும். இவை அனைத்திலும் பரவியிருக்கும் சிவபெருமானே நமக்குத் தக்க புகலிடம் தருவான். அவனைத் தஞ்சம் அடைவதே நமக்குக் கிடைக்கும் உண்மையான பரிசாகும். வாழ்வில் நமக்குக் கிடைக்கும் பொருள், புகழ் போன்ற மற்ற எதுவும் பொய்யான பரிசாகும். பொய்யான அவற்றை உண்மை என்று நம்பினால், நாம் ஆணவம் என்னும் இருளில் மூழ்கி விடுவோம்.
http://www.bbc.com/news/science-environment-14616161
Interesting how the “modern” estimate goes well with Thirumoolar’s estimate.