சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. – (திருமந்திரம் – 535)
விளக்கம்:
நமக்கெல்லாம் ஞானவழியைக் காண்பிக்கும் குருவை நோக்கி பொய்யான குற்றச்சாட்டுக்கள் வரக்கூடாது, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாட்டில் நன்னெறியும் ஞானமும் தங்காது. நெடுங்காலமாக விளங்கி வரும் பல்வேறு துறைகளின் திறமைகள் எல்லாம் அழியும். நாடு பலவழிகளிலும் கெட்டு பஞ்சமும் வந்து சேரும்.