மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. – (திருமந்திரம் – 533)
விளக்கம்:
ஓர் எழுத்து மந்திரமான பிரணவத்தை உபதேசம் செய்த தவஞானியான குருவின் மனம் நோகும்படியான செயல் எதையும் நாம் செய்யக்கூடாது. குருவின் மனம் நோகும்படியான தீமைகளைச் செய்தவர்கள் நூறு பிறவிகள் நாயாகப் பிறந்து கீழான வாழ்வு பெற்று மண்ணோடு மண்ணாவார்கள்.