செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே. – (திருமந்திரம் – 359)
விளக்கம்:
தேவர்கள் வேள்வித்தீயை மூட்டி, மந்திரங்களை உச்சரித்து தவம் செய்கிறார்கள். மந்திரங்களை உச்சரிப்பதோடு, நாம் நமது அகத்தை உற்று நோக்கி மனத்தை குவித்து தியானம் செய்வதே சிறந்த தவமாகும். இந்த தவமுறையை நாம் படர்கொடி போல் பற்றிக் கொள்ள வேண்டும்.