போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே. – (திருமந்திரம் – 465)
விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்ப நுகர்ச்சி கொள்ளும் போது, அங்கே ஒரு கருவை உருவாக்க, சிவபெருமான் தோன்றுகிறான். பாய்ந்து வரும் விந்துக்களில் ஒரு துளியை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் முப்பத்தொரு தத்துவங்களைச் சேர்த்து, கர்ப்பப் பைக்குள் ஒரு உடலை உருவாக்கும் கொடைத்தொழிலை அவன் செய்கிறான். ஆணும் பெண்ணும் மோகத்தினால் மயங்கி இருக்கும் நிலையில், சிவபெருமான் உள்ளே கரு என்னும் முட்டையைச் செய்து விடுகிறான்.