பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே. – (திருமந்திரம் – 641)
விளக்கம்:
அவரவர் பக்குவத்திற்கு ஏற்றபடி அருள் தரும் பண்பு உடையவன் நம் சிவபெருமான். அவனுடைய திருவடியே கதி என நாடி, மனத்தில் எந்தவித சந்தேகமும் இல்லாமல் சரண் அடைந்தேன். அங்கே தூய்மையான பரவெளியைக் கண்டேன். இனி இந்த உலகில் நான் ஆசைப்படக்கூடிய அரிய பொருள் என்று எதுவும் இல்லை. ஏனென்றால் மிக அரிய பரிசான அட்டமாசித்தியை எனக்கு அளித்து என் பிறப்பறுத்தான் என் சிவபெருமான்.